நண்பர்களுக்கு வணக்கம்.
இரண்டு செய்திகள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.
அழிசி இதுவரை வெளியிட்ட மின்னூல்கள் எதுவும் இப்போது கிண்டிலில் கிடைக்காது.
சில நாட்களுக்கு முன் அமேசானிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அருண் குமார்
என்பவர் க. நா. சு. நூல்களின் பதிப்புரிமை தன்னிடம் உள்ளதாகப் புகார்
கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. புகார் கொடுத்தவரின் மின்னஞ்சல் முகவரியை
அளித்து, பதிப்புரிமை
மீறலுக்காக அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமேசான் தரப்பில்
சொல்லப்பட்டிருந்தது. க. நா. சு. படைப்புகள் 2004ஆம் ஆண்டிலேயே நாட்டுடைமையானவை என்பதை விளக்கியும்
பயனில்லை. புகார் கொடுத்திருந்தவரை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோதும் பதில்
கிடைக்கவில்லை. மூன்று நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டு அனைத்து
நூல்களும் அமேசான் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. எனவே 2017 முதல் வெளியிட்ட எல்லா நூல்களும் இப்போது
விற்பனையில் இல்லை. இப்போதைக்கு மேற்கொண்டு மின்னூல் வெளியீட்டைத் தொடர இயலாது.
-
மின்னூல்களாக வெளியிட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்ற புதுமைப்பித்தனின்
‘நாரத ராமாயணம்’ நூல் விரைவில் அச்சில் வரவிருக்கிறது. காந்தியைப் பற்றி தி. சு.
அவினாசிலிங்கம் அவர்கள் எழுதிய ‘நான் கண்ட மகாத்மா’, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை
சென்ற எல். எஸ். கரையாளரின் சிறையனுபவக் குறிப்புகள் அடங்கிய ‘திருச்சி ஜெயில்’
ஆகியவையும் அச்சில் வரவுள்ளன. இவை மூன்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு
காண்பவை. இவற்றுடன் முதல் முறையாக நாரணோ ஜெயராமனின் சிறுகதைகள் ‘வாசிகள்’ என்ற
நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
நாரத ராமாயணம் - நெடுங்கதை - புதுமைப்பித்தன் - 72 பக்கம் - ரூ. 60
வாசிகள் - சிறுகதைகள் - நாரணோ ஜெயராமன் - 120 பக்கம் - ரூ. 110
நான் கண்ட மகாத்மா - கட்டுரைகள் - தி. சு. அவினாசிலிங்கம் - 192 பக்கம் - ரூ. 170
திருச்சி ஜெயில் - கட்டுரைகள் - எல். எஸ். கரையாளர் - 192 பக்கம் - ரூ. 170
அக்டோபர் 20 வரை நூல்களை
முன்பதிவு செய்யலாம். மாத இறுதிக்குள் பதிவு செய்த நூல்கள் அஞ்சலில்
அனுப்பிவைக்கப்படும். தனித்தனி நூல்களாகவும் வாங்கலாம். அஞ்சல் செலவு எங்களுடையது.
நான்கு நூல்களும் சேர்த்து ரூ. 400/-
நாரத ராமாயணம், வாசிகள்
இரண்டும் சேர்த்து ரூ. 150/-
நான் கண்ட மகாத்மா, திருச்சி
ஜெயில் இரண்டும் சேர்த்து ரூ. 300/-
வாட்ஸப் மூலம் பதிவு செய்ய: 7019426274
சிறப்புச் சலுகையில் நூல்களைப் பெற https://azhisi.stores.instamojo.com/
அழிசி நூல்கள் அனைத்தும் Commonfolks இணையதளத்திலும் கிடைக்கும்.
Comments
Post a Comment