தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வசித்த காலத்தில் அவருக்கு இரண்டு தடவை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. சில வாரங்கள் வரை அவர் நாள் ஒன்றுக்கு ஒன்பது மணி நேரம் கிழிந்த போர்வைகளையும் , சட்டைகளுக்குப் பைகளையும் தைத்து வந்தார். அவருக்குத் தரப்பட்ட பணிகளை காலக்கெடுவுக்குள் முடித்துக் கொடுத்ததோடு அல்லாமல் , மேலும் பணி வேண்டும் என்று கேட்பது அவரது வழக்கம். இந்தியச் சிறையில் சில நாட்களுக்கு ஸிங்கர் தையல் எந்திரத்தில் தையல் வேலை செய்தார். சிறைப் பணிகளை அவர் தாமாகவே ஏற்றுக்கொண்டு செய்து வந்தார். மனிதர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து வரும் எந்திரங்களுக்கு மனிதன் அடிமையாகிவருவதை அவர் எதிர்த்தார். மனித உழைப்பை அகற்றித் தேவையற்றதாக்கிவிடும் எந்திரங்களை நாம் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார். இந்தியாவைப் பொருத்தவரை கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வு நேரம் எப்போது கிடைக்கும் என்பது பிரச்சினை அல்ல ; அவர்கள் பணி ஏதும் இன்றி ஓய்ந்து கிடக்கிறார்கள் ; அந்த நேரத்தை எப்படிப் பயனுள்ள முறையில் செலவழிக்க முடியும் என்பதுதான் பிரச்சினை. தையல் எந்திரத்திற்கு மட்டும் காந்திஜி விதிவிலக்