இன்று நான் குறிப்பிட
எடுத்துக் கொண்ட புத்தகம்: R. K. Narayan எழுதிய ‘Waiting for Mahatma’.
ஏற்கனவே நீர் படித்த
புத்தகம். எனக்கு, இது
பற்றி நீர் கூறவில்லை. ஆகவே சிலவற்றை நான் கூற விரும்புகிறேன்.
காந்தியடிகளைப் பற்றிய
படப்பிடிப்புத்தான் இந்நூலில் நான் விரும்பும் முதற்பண்பு. காந்தியாரைப் பற்றி
நமது கருத்து எப்படியிருந்த போதிலும், இதை விடச் சிறந்ததொரு, உண்மையான கவர்ச்சியான படப்பிடிப்பு வேறு, இவ்வளவு சுருங்கிய முறையில்
தர முடியாது.
பாத்திரங்களில் Sriram, Bharati முதன்மையானவர்கள்.
பாரதியின் உறுதியான காந்தியப் பற்றுக்கு மேலாக அவரது இனிய கலகலப்பான பண்பு
மறக்கமுடியாது.
ஸ்ரீராம், பாரதியைப் பெறுவதற்காக
காந்திய நெறியில் புகுகின்றான். சில சமயம் இவன் கேலிக்குரியவனாகவும், எல்லாச் சமயங்களிலும்
பாரதியின் பாதையிலேயே கிடப்பவனாகவும், காண்பிக்கப்படுகிறான். ஜகதீசன் ஒரு தீவிரவாதி நேதாஜியின்
அன்பன்.
நகராண்மைக் கழகத் தலைவர்.
சாதியப் பற்று வாணிகப் பற்றாக இருப்பது பற்றிய விளக்கம். காந்தியின் இயக்கம் பற்றி
அரசின் கண்காணிப்பு. காந்தியாரின் இயக்கம் பற்றிப் பொது மக்களின் அக்கறையின்மை, அச்சம் ஆகியவை உண்மையாகச்
சித்தரிக்கப்படுகின்றன.
ஸ்ரீராமின் பாட்டி, சுடலையிலின்று எழும் காட்சி
வியப்புத் தருகிறது.
நாராயணின் சிறந்த நாவல்களில்
ஒன்று இது என்பதில் ஐயமில்லை .
காந்திய நாவல்களில் நா.
பா.வின் ‘ஆத்மாவின்
தரிசனங்களை’ விடச்
சிறந்த நாவல் இது. அதில் வரும் போதை இதில் இல்லை. இதில் தெளிவு இருக்கிறது.
('வானம்பாடிகளின் கவிதை இயக்கம்' நூலிலிருந்து)
Comments
Post a Comment