(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.) 1927 ( வயது 58) சைமன் கமிஷன் சம்பந்தமான அறிவிப்பைக் காந்திஜியிடம் வைசிராய் கொடுத்தார் . '' விஷயம் இவ்வளவுதானா !'' என்று காந்திஜி கேட்டதற்கு , அவர் , '' ஆம் '' என்று பதில் அளித்தார் . அந்த அறிவிப்பு நவம்பர் 8- ஆம் தேதி பகிரங்கமாக வெளியிடப்பட்டது . காந்திஜி பீகார் , பேரார் , மகாராஷ்டிரம் , கொங்கணம் முதலிய பல பகுதிகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு , ஏப்ரல் கடைசி வாரத்தில் மைசூரிலுள்ள நந்திமலைக்குச் சென்றார் . அங்கே ஓய்வு எடுத்துக்கொண்டார் . உடல் நலம் ப...